/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவல் நிலையங்களை ஆய்வு செய்ய சப்- - கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு
/
காவல் நிலையங்களை ஆய்வு செய்ய சப்- - கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு
காவல் நிலையங்களை ஆய்வு செய்ய சப்- - கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு
காவல் நிலையங்களை ஆய்வு செய்ய சப்- - கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு
ADDED : ஜன 19, 2024 01:17 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் நிலையங்களை, சப் -- கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் கூட்ட அரங்கில், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.
இதில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் உள்ள, காவல் நிலையங்களை, செங்கல்பட்டு சப்- - கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர், வாரத்திற்கு இரண்டு காவல் நிலையங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட, காவல் நிலையங்களை, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்குபின், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சித்தாமூர், ஒரத்தி, அணைக்கட்டு காவல் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பில் உள்ள மானிட்டர் பழுதடைந்துள்ளது.
கல்பாக்கம் காவல் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் 2021ம் ஆண்டு நிவர் புயலில், பழுதடைந்துள்ளது. இதை சீரமைத்து, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., தெரிவித்தார்.அதன் விபரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன்பின், டி.ஜி.பி.,க்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணைய எல்லைக்குட்பட்ட, வண்டலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமரா இல்லாமல் உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

