/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொங்கல் சுற்றுலா: ரூ.22 லட்சம் வருவாய்
/
பொங்கல் சுற்றுலா: ரூ.22 லட்சம் வருவாய்
ADDED : ஜன 19, 2024 12:56 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்களை, தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது.
பயணியர், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை, குழு சின்னங்களாக, ஒரே கட்டணத்தில் காண, நுழைவுக்கட்டணமாக, இந்தியரிடம், தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, அத்துறை வசூலிக்கிறது.
மாமல்லபுரம் அடுத்த, சாலவான்குப்பம் பகுதியில் உள்ள, புலிக்குகை எனப்படும் அதிரணசண்ட குடவரையை காண, இந்தியரிடம், தலா 25 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 300 ரூபாய் வசூலிக்கிறது.
குறிப்பிட்ட அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், பயணியர் படையெடுப்பர். பொங்கல் பண்டிகை விடுமுறையில், மூன்று நாட்கள் திரண்டனர்.
மாமல்லபுரம் சிற்பங்களை, ஜன., 15ம் தேதி, இந்தியர் 8,778 பேர், வெளிநாட்டினர் 191 பேர்; 16ம் தேதி, இந்தியர் 11,133 பேர்; வெளிநாட்டினர் 174 பேர்: நேற்று முன்தினம், இந்தியர் 10,354 பேர், வெளிநாட்டினர் 172 பேர் கண்டனர்.
புலிக்குகை சிற்பத்தை, ஜன., 15ம் தேதி, இந்தியர் 346 பேர், வெளிநாட்டினர் 4 பேர்; 16ம் தேதி, இந்தியர் மட்டும் 671 பேர்: நேற்று முன்தினம், இந்தியர் 714 பேர், வெளிநாட்டினர் 12 பேர் என கண்டதாக, அத்துறையினர் தெரிவித்தனர்.
நுழைவுக்கட்டணமாக, 15 லட்சத்து 80,875 ரூபாய், அத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது.
மாமல்லபுரம், வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில், காணும் பொங்கலன்று பயணியர் திரண்டுள்ளனர்
l திருப்போரூர் அடுத்த, முட்டுக்காட்டில் படகு குழாமில் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
பயணியர் விருப்பத்திற்கேற்ப துடுப்பு படகு, இயந்திரம் வாயிலாக இயங்கும் படகு, அதிவிரைவு படகுகள் உட்பட பல்வேறு வகையான படகுகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம், காணும் பொங்கலையொட்டி, 3,776 பயணியர் படகு குழாம் வந்து உல்லாசமாக படகு சவாரி செய்தனர். இதன் மூலம், 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

