/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பிரின்ஸ்' குழும பொங்கல் விழா மாணவ - மாணவியர் உற்சாகம்
/
'பிரின்ஸ்' குழும பொங்கல் விழா மாணவ - மாணவியர் உற்சாகம்
'பிரின்ஸ்' குழும பொங்கல் விழா மாணவ - மாணவியர் உற்சாகம்
'பிரின்ஸ்' குழும பொங்கல் விழா மாணவ - மாணவியர் உற்சாகம்
ADDED : ஜன 13, 2024 10:11 PM

தாம்பரம்:சென்னை அடுத்த கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், பொங்கல் விழா நடந்தது.
பிரின்ஸ் கல்வி குழும தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் தலைமையில் நடந்த விழாவில், தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திரைப்பட இயக்குனர் மோகன் ராஜா, பேச்சாளர் ராஜ்மோகன் ஆறுமுகம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பொங்கல் பானைக்கு தீ மூட்டி விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பாரம்பரிய முறைப்படி புது மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பித்தனர்
இதைத்தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
கல்லுாரி துணைத்தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், கல்லுாரி முதல்வர் கல்பனா, துணை முதல்வர் ஜானகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பிரின்ஸ் கல்வி குழும தலைவர் வாசுதேவன் பேசுகையில், ''மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது கலாசாரம், பண்பாடுகளை கற்பித்து வருகிறோம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், நமக்கு உணவளித்த உழவர் பெருமக்களுக்கு தங்கள் நன்றியை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

