/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரிக்கிலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
/
கரிக்கிலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
கரிக்கிலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
கரிக்கிலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
ADDED : மார் 27, 2025 08:31 PM
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிக்கிலி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பண்டிகை நாட்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, அருகில் உள்ள உத்திரமேரூர் மற்றும் நெல்வாய் போன்ற பகுதிகளில் இருந்து 'கேன்'களில் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
அதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்க கோரி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர்.
அதன்படி, தனியார் மருந்து நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கரிக்கிலி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதை நேற்று, தனியார் மருந்து நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா ஆகியோர், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.