/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டர் - அரசு பஸ் மோதல் இரண்டு வாலிபர்கள் பலி
/
ஸ்கூட்டர் - அரசு பஸ் மோதல் இரண்டு வாலிபர்கள் பலி
ADDED : ஜன 24, 2024 01:16 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி, 21. வெல்டர். இங்குள்ள குயவர் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் புவனேஷ், 17. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் இருந்தார்.
இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, புவனேஷ் உறவினரின் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், தண்ணீர்பந்தல் அருகே சென்றுகொண்டிருந்தனர். சிரஞ்சீவி ஸ்கூட்டரை ஓட்டினார்.
அப்போது, கல்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஸ்கூட்டரை முந்த முயன்றபோது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர், சிரஞ்சீவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புவனேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1:30 மணிக்கு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

