/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணியாளர்கள் நியமிக்க செங்கை நகரசபை அனுமதி
/
பணியாளர்கள் நியமிக்க செங்கை நகரசபை அனுமதி
ADDED : ஜன 21, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில், அலுவலகப் பணிக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய, நகரசபை அனுமதி வழங்கியது.
செங்கல்பட்டு நகராட்சியில், அலுவலகப் பணிக்காக தட்டச்சர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என, தலா மூன்று பேர் நியமிக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இப்பணியிடங்களை தினக்கூலி அடிப்படையில் நிரப்பவும், அதற்காக பொது நிதியில் இருந்து, 4.40 லட்சம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, நகரசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, டெண்டர் வாயிலாக ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுத்து, பணியாளர்கள் நியமிக்க நகரசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

