/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெயருக்கு தார்ப்பாய் மூடி செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து அபாயம்
/
பெயருக்கு தார்ப்பாய் மூடி செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து அபாயம்
பெயருக்கு தார்ப்பாய் மூடி செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து அபாயம்
பெயருக்கு தார்ப்பாய் மூடி செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : மார் 28, 2025 01:44 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், வளர்குன்றம் ஏரியில் சவுடு மண் எடுக்கப்பட்டு, கேளம்பாக்கம் அருகே நடைபெறும் ஆறுவழிச் சாலைப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள், செங்கல்பட்டு சாலை, ஓ.எம்.ஆர்., திருப்போரூர் ஆறுவழிச்சாலை வழிகளில் மண்ணை ஏற்றிச் செல்கின்றன.
லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் மண், தார்ப்பாய் மூடாமல் எடுத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், பெரும்பாலான லாரிகளில் தார்ப்பாய் மூடப்பட்டு செல்கின்றன.
ஆனால், தார்ப்பாய் முழுமையாக மூடாமல், பெயரளவிற்கு மட்டுமே மூடப்பட்டு செல்கின்றன.
தார்ப்பாய் மூடியும் பயனில்லாததால், வழக்கம் போல் மண் காற்றில் பறந்து, பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. எனவே, அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
டாரஸ் லாரிகளில் அதிக பாரத்துடன் மண் ஏற்றிச் செல்லப்படுகிறது. தார்ப்பாய் மூடுவதாகக் கூறி, கடமைக்கு லாரி மேலே ஒதுக்குப்புறமாக தார்ப்பாய் போட்டுச் செல்கின்றனர். எனவே, முழுமையாக தார்ப்பாய் மூடி லாரிகள் செல்கிறதா என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விதிமீறிச் செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.