/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய கலெக்டர் அலுவலகத்தில் பணிகளை துவக்கிய கலெக்டர்
/
புதிய கலெக்டர் அலுவலகத்தில் பணிகளை துவக்கிய கலெக்டர்
புதிய கலெக்டர் அலுவலகத்தில் பணிகளை துவக்கிய கலெக்டர்
புதிய கலெக்டர் அலுவலகத்தில் பணிகளை துவக்கிய கலெக்டர்
ADDED : ஜன 27, 2024 12:58 AM
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, 2019 நவ., 30ம் தேதி, புதிய மாவட்டம் துவக்கப்பட்டது.
நிர்வாக வசதிக்காக, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 11.50 ஏக்கர் நிலத்தில், கலெக்டர் அலுவலகம் மற்றும் பெருந்திட்ட வளாக கட்டடம் கட்ட, 119.21 கோடி ரூபாய் நிதியை, 2020ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம், அனைத்து பணிகளும் முடித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு அத்துறை நோட்டீஸ் வழங்கியது.
இதனால், தடையில்லா சான்றுபெற, தொல்லியல் துறையிடம் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு தெரிவித்தது. அதன்படி, தொல்லியல் துறையிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
கலெக்டர் அலுவலகம் தவிர்த்து, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, கூட்டுறவு, நில அளவை பதிவேடுகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகள், கடந்த டிச., 11ம் தேதியில் இருந்து இயங்கி வருகின்றன.
தொடர்ந்து, குடியரசு தின விழா நாளில், புதிய கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராகுல்நாத், நேற்று பணிகளை துவக்கினார்.
இதில், எஸ்.பி., சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா, சப் -- கலெக்டர் நாராயணசர்மா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

