/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டீக்கடையில் ஆசாமிகள் ரகளை எண்ணெய் கொட்டி மூவர் காயம்
/
டீக்கடையில் ஆசாமிகள் ரகளை எண்ணெய் கொட்டி மூவர் காயம்
டீக்கடையில் ஆசாமிகள் ரகளை எண்ணெய் கொட்டி மூவர் காயம்
டீக்கடையில் ஆசாமிகள் ரகளை எண்ணெய் கொட்டி மூவர் காயம்
ADDED : ஜன 21, 2024 05:41 AM
தாம்பரம்: விருதுநகர் ராஜபாளையம், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 30. இவர், நேற்று முன்தினம் இரவு, மேற்கு தாம்பரம், லட்சுமிபுரத்தில் உள்ள கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, போதையில் கடைக்கு வந்த பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்த பாலகுரு, 37, முடிச்சூரை சேர்ந்த கண்ணன், 55, ஆகியோர், கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளனர்.
உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி, சிலம்பரசன் கொடுத்தபோது, அவர்கள் 'பாட்டிலை திறந்து கொடுக்க மாட்டியா' என ரகளை செய்தனர்.
அதற்கு சிலம்பரசன் பதில் கூறாமல் சென்றதால் ஆத்திரமடைந்த இருவரும், சிலம்பரசனின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். அப்போது, கொதிக்கும் எண்ணெய் மூன்று பேர் மீதும் கொட்டியது.
மூவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

