/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று தை கிருத்திகை விழா
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று தை கிருத்திகை விழா
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று தை கிருத்திகை விழா
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று தை கிருத்திகை விழா
ADDED : ஜன 18, 2024 10:36 PM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் கிருத்திகை விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு தை கிருத்திகை சிறப்பு விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி கோவில் திருமண மண்டப வளாகத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விதமாக அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சி, அன்னதானம், பட்டிமன்றம் பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், இன்று மாலை 6:00 மணி முதல், நாளை இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது .
இன்று, மாலை 6:00 மணியளவில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
நாளை, காலை 7:00 மணியளவில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஒரு நாள் முழுதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசுவாமி கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.