/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா
ADDED : செப் 26, 2025 03:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கோவிலில், நவராத்திரி விழா நடந்தது.
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கோவில் உள்ளது.
இங்கு கடந்த 2016ம் ஆண்டில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் வசந்த கால நவராத்திரி விழா, தசரா நவராத்திரி விழா என நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தசரா நவராத்திரி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும், யாக சாலை பூஜை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் வீதி உலா, லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் இரவு மூன்றாம் நாள் உத்சவத்தில் ஸ்ரீ யோக பாலா அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில், சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.