/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜாமினில் வந்து ரகளை இருவருக்கு மீண்டும் சிறை
/
ஜாமினில் வந்து ரகளை இருவருக்கு மீண்டும் சிறை
ADDED : ஜூன் 25, 2025 02:25 AM

கூடுவாஞ்சேரி,:நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர், துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விநாயக மூர்த்தி, 22. அதே பகுதி, ஜி.எஸ்.டி., சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல், 21. இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்த இவர்கள், மீண்டும் ரவுடியிசத்தில் இறங்கி, குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்கினர்.
பின், பொதுமக்கள் அளித்த புகாரின்படி விநாயக மூர்த்தி, சக்திவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.
பின், வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.