/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்து வசதியற்ற கிராமங்கள் சேவை ஏற்படுத்த வேண்டுகோள்
/
பேருந்து வசதியற்ற கிராமங்கள் சேவை ஏற்படுத்த வேண்டுகோள்
பேருந்து வசதியற்ற கிராமங்கள் சேவை ஏற்படுத்த வேண்டுகோள்
பேருந்து வசதியற்ற கிராமங்கள் சேவை ஏற்படுத்த வேண்டுகோள்
ADDED : ஜன 23, 2024 05:11 AM
அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை, திருமுக்காடு, உத்தமநல்லுார், சீதாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை.
அதேபோல், தொழுப்பேட்டில் இருந்து ஒரத்தி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து அன்னங்கால், புறங்கால், கூனங்கரணை, ராஜாம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களும் பேருந்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இந்த கிராம பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் என, பலதரப்பட்ட மக்களும், 2 முதல் 3 கி.மீட்டர் துாரம் நடந்து சென்று, புறவழிச் சாலையில் பேருந்து பிடித்து, டவுன் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேருந்து வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

