/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் அருகே 65 ஏக்கரில் தயாராகும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா
/
திருப்போரூர் அருகே 65 ஏக்கரில் தயாராகும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா
திருப்போரூர் அருகே 65 ஏக்கரில் தயாராகும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா
திருப்போரூர் அருகே 65 ஏக்கரில் தயாராகும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா
ADDED : ஜூன் 23, 2025 11:52 PM

திருப்போரூர், திருப்போரூர் அருகே, 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்,'வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா, இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுதும் உள்ள மக்கள், தங்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியில், இ.சி.ஆர்., சாலை, ஓ.எம்.ஆர்., சாலைகளில், இதுபோன்று பல்வேறு பொழுதுபோக்கு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அத்துடன், நாட்டின் முன்னணி 'தீம் பார்க்' நிறுவனமாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில், பொழுதுபோக்கு பூங்கா அமைத்து செயல்படுத்தி வருகிறது.
தற்போது, இந்த வொண்டர்லா நிறுவனம், மாநில அரசு உதவியுடன் தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, தன் முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைத்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த இள்ளலுார் என்ற பகுதியில், 65 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பூங்கா, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பூங்கா சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய 'ரோலர் கோஸ்டர்' இந்த மையத்தில் இடம்பெறுகிறது.
இந்த ரோலர் கோஸ்டர் லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதைப் போன்று இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது மட்டும், 80 கோடி ரூபாயில் அமைகிறது.
தொடர் விடுமுறை நாட்களின் போது, இந்த பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில், வொண்டர்லா நிறுவனம் இறங்கியுள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் வொண்டர்லா நிறுவனம் அமைக்கும் முதல் பொழுதுபோக்கு பூங்கா என்பதால், திறப்பு குறித்த அதிகமான எதிர்பார்ப்புடன் சுற்றுலா பயணியர் உள்ளனர்.