/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
-உலக நன்மைக்காக காயத்ரி மகா யாகம்
/
-உலக நன்மைக்காக காயத்ரி மகா யாகம்
ADDED : ஜன 19, 2024 12:29 AM
சென்னை, சென்னை ஆரிய சமாஜம் சார்பில், ஆண்டுதோறும் காயத்ரி மகா யாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த யாகம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்திற்காகவும், அமைதி, குடும்பம், நாட்டு நலனுக்காகவும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான காயத்ரி மகா யாகம், கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, ஆர்ய சமாஜ் மந்திரில், இன்று முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
முதல் இரண்டு நாட்கள், தினமும் காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையும்; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. மூன்றாம் நாளான, 21ம் தேதி, காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை யாகம் நடக்கிறது.
இந்நிகழ்வில் புகழ்பெற்ற வேத வித்வான் சுவாமி விவேகானந்த் ஜி, வேதங்கள் பற்றிய சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
யாகத்தில் பங்கேற்க விரும்புவோர், 72007 62629 என்ற மொபைல் போன் எண்ணிலும், aryasamaj@davchennai.org என்ற இணையதளம் வாயிலாகவும் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த யாகத்தில் பங்கேற்க கட்டணம் கிடையாது. குடும்பத்துடன் பங்கேற்று பயன்பெறலாம் என, ஆரிய சமாஜம் தெரிவித்துள்ளது.

