/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்
/
காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்
காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்
காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்
ADDED : ஜூன் 24, 2024 02:17 AM

காசிமேடு:தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபின், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.
இதில், சங்கரா, தும்பிலி, நெத்திலி, கடமா, நவரை, கிளிச்ச, வெள்ள ஊடான் உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகளவில் விற்பனைக்கு வந்தன. வஞ்சிரம், பாறை, திருக்கை, கொடுவா, பர்லா உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து விரவில் விட்டு எண்ணும் அளவிற்கே காணப்பட்டன.
நேற்று அதிகாலை 2:00 மணி முதல் காசிமேடில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது.
இருந்தும் பெரிய மீன்களின் வரத்து இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிறிய மீன்களின் வரத்து அதிகளவில் இருந்ததால், மீன் விலை குறைந்து காணப்பட்டது.
கடலில் இரு வாரங்கள் தங்கி மீன்பிடித்த படகுகள் அடுத்த வாரம், கரை திரும்ப உள்ளன. அப்போது பெரிய மீன்களின் வரத்து அதிகம் இருக்கும்,'' என்றனர்.
மீன்வரத்து அதிகம் இருந்ததால் மீன்களை பேரம் பேசி வாங்க முடிந்தது. பெரிய கொடுவா ஒன்று 500 ரூபாய்க்கும்; நண்டு 200 ரூபாய்க்கும்; இறால் 300 ரூபாய்க்கும் வாங்கினேன். அடுத்த வாரங்களில், இதை விட மீன் விலை குறைவாக இருக்கும் என எதிர்ப்பாக்கிறோம்.
ஜான்,
வண்ணாரப்பேட்டை
மீன் விலை நிலவரம்
வகை கிலோ (ரூ.)
சிறிய வஞ்சிரம் 1,000 - 1,200
வவ்வால் 700 - 1,500
கொடுவா 500 - 1,000
சின்ன கொடுவா 300
சங்கரா 200 - 600
கனாகத்த 150 200
சீலா 150 - 250
நெத்திலி 200 - 250
மத்தி 100
வாளை 200
கவளை 150
நண்டு 200 - 600
வெள்ள ஊடான் 100
நவர - 100 - 150
தேரல் பாறை 250 - 300
இறால் 300 - 500
கடம்பா 150 - 300