/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் போட்டி 1,000 மாணவர்கள் உற்சாகம்
/
மாற்றுத்திறனாளிகள் போட்டி 1,000 மாணவர்கள் உற்சாகம்
மாற்றுத்திறனாளிகள் போட்டி 1,000 மாணவர்கள் உற்சாகம்
மாற்றுத்திறனாளிகள் போட்டி 1,000 மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 15, 2025 12:21 AM

சென்னை, சென்னை மண்டல அளவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, சென்னையில் நேற்று நடந்தது.
மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் - 10 சார்பில், யூனிபைடெட் ஸ்போர்ட்ஸ் கார்னிவல் எனும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நேற்று நடந்தது.
சென்னை மாவட்டத்தின் 1,000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். இதில் பார்வையற்ற மாணவர்களுக்கான கால்பந்து போட்டி, ஊனமுற்ற மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள், மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இந்த நிகழ்வில், முன்னாள் டென்னிஸ் வீரர் சொம்தேவ் தேவ்வர்மன் பங்கேற்றார். போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.