ADDED : ஜன 14, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை, சுகாதாரத் துறையினர் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
அந்த வகையில், ஒன்றாவது மண்டலம் பம்மலில், நல்லதம்பி, பொழிச்சலுார், பம்மல் - திருநீர்மலை, பல்லாவரம் - குன்றத்துார் சாலைகளில், இரண்டு நாட்களில், போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 15 மாடுகளை, சுகாதாரத் துறையினர் பிடித்தனர்.
இதில், 10 மாடுகளின் உரிமையாளர்கள் தலா, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி, அவற்றை பிடித்து சென்றனர். எஞ்சிய ஐந்து மாடுகள், கோசாலைக்கு அனுப்பப்பட்டன.

