sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம்...கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

/

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம்...கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம்...கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்

படப்பை அருகே 200 ஏக்கர் அரசு நிலம்...கபளீகரம்! அரசியல் அழுத்தத்தால் மீட்பதில் திணறல்


ADDED : ஜன 20, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்ட வீடுகள் முளைத்துள்ளன. அரசியல் அழுத்தம் இருப்பதால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வருவாய் துறையின் கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,100 ஏக்கர் அரசு நிலங்களும், 600 ஏக்கர் நீர்நிலை என, 1,700 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன.அவற்றை மீட்க வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர்.

வேகவதி ஆறு, மணிமங்கலம் நீர்ப்பிடிப்பு பகுதி, வரதராஜபுரம் அணைக்கட்டு, தாங்கல் ஏரி, படப்பை அருகேஉள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் சிக்கி, மீட்க முடியாமல் உள்ளது.

படப்பை அருகேயுள்ள புஷ்பகிரியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, 20 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர்.

மேய்க்கால் புறம்போக்கு நிலம் மட்டுமல்லாமல், 10 ஏக்கர் மயான புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இங்கு, பெரிய அளவிலான பண்ணை வீடுகளும், தோட்டங்களும் முளைத்துள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன், அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர், அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்ற முயன்றனர்.

ஆனால், நடவடிக்கை திடீரென கைவிடப்பட்டது.சில மாதங்களுக்கு முன், இந்த இடத்தை நில நிர்வாக கமிஷனர் நாகராஜன் பார்வையிட்டு சென்றார்.

ஆனால், நிலத்தை மீட்க தேவையான நடவடிக்கையில் நில நிர்வாக கமிஷனர் அலுவலகம் தீவிரம் காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் அலட்சியத் தால், தற்போது அவசரகதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மேய்க்கால் புறம்போக்கு நிலமாக இருந்தாலும், வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் தான் அந்த இடம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுப்பதும், அகற்றுவதும் என, அனைத்து நடவடிக்கையும் வருவாய் துறை தான் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் கூறியதாவது:

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்குப்படி நாங்கள் அவ்வபோது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். புஷ்பகிரி ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us