/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பிரண்ட்ஸ் போரம் 25ம் ஆண்டு வெள்ளி விழா
/
சென்னை பிரண்ட்ஸ் போரம் 25ம் ஆண்டு வெள்ளி விழா
ADDED : ஜன 20, 2024 11:39 PM

மயிலாப்பூர், பொருளாதாரம், மருத்துவம், நாட்டு நலன் என பல்வேறு துறைகளில் சிந்தனையாளர்கள் ஒன்று கூடி பேசுவதற்கும், அவற்றை செயலாக்கவும் ஒரு கூட்டமைப்பு வேண்டும் என கருதி, 1998 ல் 'சென்னை பிரண்ட்ஸ் போரம்' துவக்கப்பட்டது.
இதன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி, மயிலாப்பூர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை சமஸ்கிருத கல்லுாரியில் நேற்று நடந்தது.
சென்னை பிரண்ட்ஸ் போரம் அமைப்பை வழி நடத்தி வரும் 83 வயதான செயலர் ராமமூர்த்தியை உற்சாகப்படுத்தும் விதமாக, அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஆண்டு மலரும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், ஆர்.பி.வி.எஸ். மணியன், மருத்துவர்கள் சொக்கலிங்கம், சுமந்த், தினமலர் முன்னாள் உதவி ஆசிரியர் ராமலிங்கம் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மருத்துவர் சொக்கலிங்கம் பேசியதாவது:
மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்சி உள்ளது. விட்டு கொடுப்பதிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதிலும், முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்திப்பதில், இதயம் 100 ஆண்டு சீராக இயங்கும். நாம் அனைவரும் மருந்தில்லா மருத்துவத்தை நோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

