/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர் கொலையில் 4 பேர் கைது
/
துாய்மை பணியாளர் கொலையில் 4 பேர் கைது
ADDED : பிப் 02, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர் கண்ணகிநகரை சேர்ந்தவர் டில்லிபாபு, 37. அடையாறு மண்டலம், 180வது வார்டில் துாய்மை ஊழியராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் மாலை, துாய்மை பணி செய்துவிட்டு, பேட்டரி வாகனத்தை எல்.பி., சாலையில் உள்ள மையத்தில் ஓட்டி சென்றார்.
அப்போது ஆட்டோ நிறுத்தத்தில் மறைந்திருந்த நான்கு பேர், டில்லிபாபுவை ஓட ஓட விரட்டி கொலை செய்தனர்.
திருவான்மியூர் போலீசார் விசாரணையில், முன்விரோதத்தில் கொலை செய்தது தெரிந்தது.
இது தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த அருண், 25, வினோத், 36, மற்றும் 18 வயதுள்ள இரண்டு பேரை, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

