/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாருக்கு 400 குடியிருப்புகள் பொங்கல் விழாவில் டி.ஜி.பி., தகவல்
/
போலீசாருக்கு 400 குடியிருப்புகள் பொங்கல் விழாவில் டி.ஜி.பி., தகவல்
போலீசாருக்கு 400 குடியிருப்புகள் பொங்கல் விழாவில் டி.ஜி.பி., தகவல்
போலீசாருக்கு 400 குடியிருப்புகள் பொங்கல் விழாவில் டி.ஜி.பி., தகவல்
ADDED : ஜன 14, 2024 02:37 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு சார்பிலும், ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை சார்பிலும், புனித தோமையர்மலையில் ஆயுதப்படை சார்பிலும் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
புனித தோமையார்மலை நடந்த விழாவில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பங்கேற்று காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
பின், அவர் பேசியதாவது:
காவல் துறையினர், பண்டிகை நாட்களில் கட்டாயம் பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆகையால், நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இதுபோன்ற தமிழக பாரம்பரிய விழாக்களை நாம் குடும்பத்துடன் நடத்தி சந்தோஷப்பட வேண்டும்.
காவலர்களுக்கு மிகப்பெரிய சவால் சென்னையில் வீடு கிடைப்பது தான். வாடகையும் அதிகம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசு ஒருங்கிணைந்த திட்டத்தின் படி, 200 கோடி ரூபாய் மதிப்பில், 400 காவலர் குடியிருப்புகள் பெரும்பாக்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது. இதேபோல, திருச்சி, கோவையிலும் காவல் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் மனைவியுடன் பங்கேற்று, பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணைக் கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, துணைக் கமிஷனர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் போலீஸ் கன்வென்சன் சென்டரில், ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

