ADDED : ஜன 23, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்கி, சாட்டை அடிக்கும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், செல்வம் என்பவரின் ஒன்றரை வயது மகன் அசோக், கடந்த இரண்டு வாரங்களாக, அம்மை நோயால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தங்க வைக்கப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்று மதியம், சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

