/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்
/
தீக்குளிப்பதாக மிரட்டிய பணிப்பெண் மீது புகார்
ADDED : பிப் 02, 2024 12:19 AM
ஆழ்வார்பேட்டை, சென்னை ஆழ்வார்பேட்டை, முராயஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தீன தயாளன். சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் அபர்ணா, 60, மருத்துவர்.
இவர்களது வீட்டில் சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி, 50, என்பவர், 36 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
தீன தயாளன் இறந்ததால், அவரது மகள் அபர்ணா, வீட்டை விற்றுவிட்டு கர்நாடகாவிற்கு செல்ல உள்ளார். கிருஷ்ணகுமாரிக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு அபர்ணா காசோலை வழங்கியுள்ளார்.
ஆனால், தனக்கு வழங்கிய பணம் போதாது எனக்கூறி, மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கிருஷ்ணகுமாரி பணம் கேட்டு மிரட்டுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அபர்ணா புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

