/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
/
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : ஜன 14, 2024 02:39 AM
குரோம்பேட்டை,அதிக ரத்த வாந்தி காரணமாக, உணவு குழாய் வெடித்த ஒரு நோயாளி, ரேலா மருத்துவமனை டாக்டர்களில் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.
பல்லாவரத்தை சேர்ந்தவர் மீரான் மொய்தீன், 49. சிலர் நாட்களுக்கு முன், இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்ட்டது. அதிக அளவு இரத்த வாந்தியும் எடுத்தார். இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவர், பலவீனம் அடைந்ததால், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டது. சுய நினைவையும் இழந்தார். சி.டி., ஸ்கேன் எடுத்து பார்த்ததில், உணவுக் குழாய் (வயிற்றுக்கு அருகில் உள்ள உணவுக் குழாய்) வெடித்து, தொடர்ச்சியான ரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது.
மார்பு குழியில் ரத்தமும், வயிற்றில் இருந்து வெளியேறிய உணவும் நிரம்பியது. இதையடுத்து, மருத்துவர்கள் பியூஷ் பவானே, ரவி ஆகியோர் கொண்ட குழுவினர், நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது 'போயர்ஹாவ் சிண்ட்ரோம்' என்று கண்டறிந்தனர்.
ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும், உணவுக் குழாயின் துளைகளை மூடுவதற்கும் எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரத்யேக உலோக கிளிப்பை கொண்டு துளையிடப்பட்ட உணவுக் குழாயை மூடினர். இந்த சிகிச்சை, உலகிலேயே அரிதானது. அதன் பின் உடல் நலம் தேரிய, மீரான் மொய்தின், ஆறாவது நாளில், மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

