/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்
/
மெட்ரோ ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்
மெட்ரோ ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்
மெட்ரோ ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்
ADDED : ஜன 24, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனம்பாக்கம், சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் தருண், 21. இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று கல்லுாரி முடிந்து வீட்டிற்குச் செல்ல, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் மெட்ரோ ரயில், மீனம்பாக்கத்தில் வந்து நின்றது. அப்போது, தருண் திடீரென ரயில் முன் குதித்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
உடனே அங்கிருந்தோர், தருணை மீட்டனர். தலை மற்றும் காலில் படுகாயமடைந்த அவரை, குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மீனம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.