/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியரிடம் சில்மிஷம் காவலாளிக்கு தர்ம அடி
/
சிறுமியரிடம் சில்மிஷம் காவலாளிக்கு தர்ம அடி
ADDED : ஜூன் 24, 2025 12:25 AM
நொளம்பூர், சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலாளிக்கு, குடியிருப்புவாசிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி, 53. இவர், அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அதே குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும், ஒன்பது மற்றும் ஏழு வயது கொண்ட இரண்டு சிறுமியரிடம், இரு தினங்களுக்கு முன் காவலாளி பழனி, பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அறந்த பெற்றோர் மற்றும் குடியிப்புவாசிகள், காவலாளி பழனிக்கு தர்ம அடி கொடுத்து திருமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.