/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 12:11 AM
தண்டையார்பேட்டை, வடசென்னை அ.தி.மு.க., சார்பில், வடக்கு, கிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் எதிரே, தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டம் - ஒழுங்கு சீரழிவு, கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகன் மீது கண் துடைப்பு நடவடிக்கை, தொடர் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, ஆர்.கே.நகர், பெரம்பூர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில இணை செயலர் நேதாஜி கணேசன் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

