/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையில் சிறுக சிறுக நகை திருடிய ஊழியர்
/
கடையில் சிறுக சிறுக நகை திருடிய ஊழியர்
ADDED : ஜன 24, 2024 12:30 AM
தி.நகர், சென்னை, தி.நகர் துரைசாமி சாலையில், சரவணா எலைட் கோல்டு ஹவுஸ் கடை உள்ளது. இந்த கடையில் இருந்து திடீரென, 170 கிராம் தங்க நகைகள் மாயமாகின.
இதுகுறித்து கடை நிர்வாகம் சார்பில், மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, நகை கடையின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், கடையின் விற்பனை பிரிவில் பணிபுரியும் திருநேல்வேலி, புதுார், இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், 24, என்பவர், நகைகளை திருடியது தெரிந்தது.
நேற்று அவரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், கடந்த ஐந்து மாதங்களாக சிறுக, சிறுக நகையை திருடி, அதற்கு பதில் கவரிங் நகையை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
விசாரணைக்குப் பின், லிங்கேஸ்வரனிடம் இருந்து 120 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

