நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்கள் மேலாண்மை தலைமை நிர்வாக அலுவலராக, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது அயல் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான உத்தரவுகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் வெளியிடப்படும். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.

