/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீர்பாட்டில் தொலைந்த ஆத்திரம் போலீசை தாக்கியவர் கைது
/
பீர்பாட்டில் தொலைந்த ஆத்திரம் போலீசை தாக்கியவர் கைது
பீர்பாட்டில் தொலைந்த ஆத்திரம் போலீசை தாக்கியவர் கைது
பீர்பாட்டில் தொலைந்த ஆத்திரம் போலீசை தாக்கியவர் கைது
ADDED : பிப் 02, 2024 12:11 AM
கோயம்பேடு, தே.மு.தி.க., முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல், கோயம்பேடில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் கோயம்பேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, போக்குவரத்து பெண் போலீஸ் ஜீவிதா, 29, என்பவர் இங்கு பணியில் இருந்தார். அப்போது, திருமங்கலத்தைச் சேர்ந்த ரபீக், 44, என்பவர் மதுபோதையில் வந்து, நினைவிடத்தில் கதறி அழுது ரகளை செய்தார். அங்கிருந்தோர் அவரை துரத்தியதால், தன் இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, அதில் வைத்திருந்த பீர்பாட்டில் காணாமல் போனதை கண்டு ஆத்திரமடைந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஜீவிதாவிடம் சென்று, 'பைக்கில் வைத்திருந்த பீர்பாட்டில் காணவில்லை' என தகராறு செய்துள்ளார். திடீரென, ஜீவிதாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார். அவரை பிடிக்க முயன்ற போது, பைக்கை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார். ஜீவிதா அளித்த புகாரின்படி, ரபீக்கை போலீசார் கைது செய்தனர்.

