ADDED : ஜன 24, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாதிரிப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவன் தெருவைச் சேர்ந்தவர் ஹென்றி, 55. இவர், மீன் வெட்டும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை, சிந்தாதிரிப்பேட்டை, அம்மா நகர் பூத் அருகில் உள்ள டீக்கடையில் அமர்ந்து இருந்தார்.
அங்கு, சிந்தாதிரிப்பேட்டை, என்.என்.காலனியைச் சேர்ந்த கொலை வழக்கு ரவுடிகள் சதீஷ் குமார், 24, விக்னேஷ், 22, புலி மூட்டை தினேஷ், 22, வெள்ள சஞ்சய், 21, ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஹென்றியிடம் மாமூல் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுக்கவே, உருட்டு கட்டை மற்றும் கத்தியால் ஹென்றியை தாக்கி தப்பினர்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து, சதீஷ் குமார், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது பா.ஜ. நிர்வாகி பாலசந்தர் கொலை வழக்கு இருப்பதும் தெரிந்தது.

