நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான, சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ்., அடையாறு, நேரு விளையாட்டு அரங்கம் முதல் ராஜ் பவன் வரையிலும், பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, 19 மற்றும் 20 ஆகிய இருநாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

