/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் பிரச்னைக்கு வாரியம் மாற்று ஏற்பாடு
/
கழிவுநீர் பிரச்னைக்கு வாரியம் மாற்று ஏற்பாடு
ADDED : ஜன 24, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, அடையாறு, எல்.பி. சாலையில் கழிவுநீர் உந்து நிலையம் அருகில், குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்றும், நாளையும் உந்து நிலையம் செயல்படாது.
இதனால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில், இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.
அப்படி வெளியேறினால், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம் கொண்டு கழிவுநீர் வெளியேற்றப்படும்.
இதற்கு, தேனாம்பேட்டை மண்டலத்தில் 8144930909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்தில், 8144930913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

