/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பள்ளியில் காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுவன் மீட்பு
/
அரசு பள்ளியில் காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுவன் மீட்பு
அரசு பள்ளியில் காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுவன் மீட்பு
அரசு பள்ளியில் காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுவன் மீட்பு
ADDED : ஜன 20, 2024 11:38 PM
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், பாரதி நகரை சேர்ந்த 12 வயது சிறுவன் வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், விளையாட செல்வதாக கூறி வெளியில் சென்றுள்ளார். இரவு வரை வீடு திருப்பததால், வில்லிவாக்கம் போலீசில் பெற்றோர்கள் நேற்று காலை புகார் அளித்தார்.
இந்நிலையில், வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில், கண் மற்றும் தலையில் காயத்துடன், கயிற்றால் கட்டப்பட்டு சிறுவன் மயங்கிக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், காணாமல் போன சிறுவன் என்பது உறுதியானது.
சம்பவம் நடந்த பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து, சிறுவர்கள் சிலர் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கஞ்சா போதையில் சிறுவனை கடத்தி, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் ஐந்து சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

