ADDED : ஜன 14, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அஸ்மத், 58; தனியார் சர்க்கஸில் வேலை செய்து வந்தார். இரு தினங்களுக்கு முன் சர்க்கசில் இயங்கி வரும் ஆட்டோவை பழுது பார்க்க, சென்னீர் குப்பத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது, கடைக்கு வந்த இருவர், ஆட்டோவில் ஒட்டுவதற்கு சர்க்கஸ் விளம்பர ஸ்டிக்கர் கேட்டுள்ளனர். முகமது ஆசாத் ஸ்டிக்கர் இல்லை எனக் கூறியதால், ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கினர்.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்து, தலையில் கல் குத்தியதால் முகமது அஸ்மத் மயங்கினார்.அவரை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிழந்தார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

