/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிட்டி பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அபாரம்
/
சிட்டி பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அபாரம்
ADDED : ஜன 19, 2024 12:14 AM
சென்னை,டி.என்.சி.ஏ., எனும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான ராமசாமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. சென்னையில் நேற்று, காலிறுதிப் போட்டிகள் துவங்கின.
அதில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மற்றும் பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை செயின்ட் பப்ளிக் பள்ளி அணிகள் மோதின.
முதல் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 253 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த செயின்ட் பப்ளிக் பள்ளி 38.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 116 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 137 ரன்கள் வித்தியாசத்தில், செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், சேத்துப்பட்டு சார் முத்தா பள்ளியை, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளி தோற்கடித்தது. மற்ற போட்டிகளில், கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., மில்லினியம் அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அணியையும், லாலாஜி ஓமேகா பள்ளி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

