ADDED : ஜன 14, 2024 02:15 AM
நான் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக எனது சொந்த ஊரான பாபநாசம் செல்வதற்காக, தடம் எண்: 180 யு.டி., என்ற அரசு விரைவு பேருந்தில், திருநெல்வேலி வரை முன்பதிவு செய்தேன்.
இந்த பேருந்து, நேற்று மாலை 5:20 நிமிடத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டும். ஆனால், ௩௦ நிமிடம் தாமதமாக கிளம்பியது.
- எஸ்.சங்கீதா, 24, பாபநாசம்.
-------------------------------------------
நான் சென்னை வண்ணாரப்பேட்டையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கன்னியாகுமரியில் எனது உறவினர் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டார். அதனால், கன்னியாகுமரி செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தேன்.
அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்யப்பட்டதால், சீட் கிடைக்காமல் தவித்தேன். பின், ஒரு பேருந்தில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.
இந்த பேருந்து 6:30 மணிக்கு செல்லும் என்றனர். ஆனால், 30 நிமிடம் தாமதமாக 7:00 மணிக்கு கிளம்பியது.
- எஸ்.ராமகிருஷ்ணன், 46, கிளாம்பாக்கம்.
--------------------------------------------
முன்பதிவு செய்த பயணியர் போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறித்த நேரத்தில் வர இயலவில்லை. ஐந்து முதல் 10 பயணியர் வராததால், அவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம்.
பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருக்கிறோம். எப்படி வரவேண்டும் என, எங்களிடமே கேட்கின்றனர்.
இதனால், ௩௦ நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
- அரசு பேருந்து டிரைவர்.

