/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.200 கோடி திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. கூட்டத்தில் ஒப்புதல்
/
ரூ.200 கோடி திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. கூட்டத்தில் ஒப்புதல்
ரூ.200 கோடி திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. கூட்டத்தில் ஒப்புதல்
ரூ.200 கோடி திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. கூட்டத்தில் ஒப்புதல்
ADDED : ஜன 23, 2024 12:22 AM
சென்னை சென்னை பெருநகரில் புதிதாக பூங்காக்கள் அமைப்பது, விளையாட்டு அரங்கங்கள் அமைப்பது, சிறிய கட்டடங்கள் கட்டுவது என, பல்வேறு திட்டங்கள், 2023 - 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு கலந்தாலோசகர்கள் வாயிலாக விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கட்டுமான பணிக்கான டெண்டர்கள் தயாரிக்கப்பட்டன.
இதில், விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பில் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து திட்ட மதிப்புகளை, அனுமதிக்கப்பட்ட தொகையை விட 10 சதவீதம் வரை அதிகரிக்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முயற்சித்தனர். கடந்த மாதம் நடந்த குழும கூட்டத்தில் உயர் அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த கோப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வின், 277வது குழும கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், டெண்டர் கோப்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அப்போது, உறுப்பினர்கள் வலியுறுத்தல் காரணமாக, மதிப்பு உயர்த்தும் பணிகள் 5 சதவீதம் அதற்கு குறைவாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான, 19 டெண்டர்களின் மதிப்புகளை இறுதி செய்ய குழும கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதே போன்று, எட்டு இடங்களில் நில வகைபாடு மாற்றும் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பொறுப்பை புனே நகரை சேர்ந்த பி.வி.ஜி., நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

