/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 பஸ் நிறுத்தங்களில் 'ஏசி' நிழற்குடை டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,
/
4 பஸ் நிறுத்தங்களில் 'ஏசி' நிழற்குடை டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,
4 பஸ் நிறுத்தங்களில் 'ஏசி' நிழற்குடை டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,
4 பஸ் நிறுத்தங்களில் 'ஏசி' நிழற்குடை டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,
ADDED : ஜூலை 02, 2025 11:54 PM

சென்னை, :கொளத்துார், ராயபுரம், பெரம்பூர், வால்டாக்ஸ் சாலை என, நான்கு பஸ் நிறுத்தங்களில், 'ஏசி' வசதியுடன் பயணியர் நிழற்குடைகள் அமைக்க, சி.எம்.டி.ஏ., டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னையில், 700க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் மேற்கூரை அமைத்து, மாநகராட்சி பராமரித்து வருகிறது. ஆனால், சில இடங்களில் மேற்கூரை வசதி இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பஸ் நிறுத்தங்களில் படிப்படியாக மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, சென்னையில் நான்கு பஸ் நிறுத்தங்களில், 'ஏசி' வசதியுடன், பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகள் கூறியதாவது:
ராயபுரம், கொளத்துார், பெரம்பூர், வால்டாக்ஸ் சாலை என, நான்கு இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில், 'ஏசி' வசதியுடன் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணியை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டள்ளது. ஆர்வமுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், ஜூலை 17க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வாகும் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.