/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5வது தளத்தில் சிக்கிய பசு மாடு மீட்பு
/
5வது தளத்தில் சிக்கிய பசு மாடு மீட்பு
ADDED : ஜூன் 24, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரில், நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு நல வாரியம் சார்பில், ஏழு தளங்களுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நேற்று, அதன் ஐந்தாவது தளத்தில், வழி தவறி ஏறிய பசு மாடு ஒன்று, இறங்க முடியாமல் கத்தியது.
இதைப் பார்த்த பொதுமக்கள், மாட்டை கீழே இறக்க முயற்சித்தனர். மாடு மிரண்டதால், அதன் அருகில் யாரும் செல்லவில்லை. இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள், லாவகமாக பசு மாட்டை மீட்டு, தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாப்பாக விடுவித்தனர்.