ADDED : ஜன 23, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மெட்ரோ ரயில் சேவையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சென்னையில் உள்ள அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'மெட்ரோ ரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு போட்டி நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், வரும் 23 முதல் பிப். 22 வரை ஆன்லைனில் https://forms.gle/இணைப்பில் பதிவு செய்யலாம்.
மார்ச் 31 க்குள் படைப்பை சமர்ப்பிக்க வேண்டும். ஏப். 14ம் தேதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு, lmc@cmrl.in என்ற இ.மெயிலை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

