/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
50 ஆண்டு பழமையான ஏ.வி.எம்., தியேட்டர் இடிப்பு
/
50 ஆண்டு பழமையான ஏ.வி.எம்., தியேட்டர் இடிப்பு
ADDED : செப் 26, 2025 02:31 AM
வடபழனி சென்னை, வடபழனி ஆற்காடு சாலையில், 1970ல் ஏ.வி.எம்., ஸ்டூடியோ நிறுவனத்தால், ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திரையரங்கம் கட்டப்பட்டது.
'மால், மல்டி பிளக்ஸ்' திரையரங்குகள் வருகைக்கு பிறகும், டிக்கெட் விலை அதிகரித்த நிலையிலும், நடுத்தர குடும்பத்தினர் பயன்பெற, குறைந்த விலைக்கே இந்த திரையரங்கில் டிக்கெட் விற்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காலத்தில், ரசிகர்கள் கூட்டம் குறையவே, 2020ல், ஏ.வி.எம்., திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்நிலையில் 55 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஏ.வி.எம்., திரையரங்கம் இடிக்கும் பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே, ஏ.வி.எம்., ஸ்டூடியோவின் பல்வேறு பகுதிகள், மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி உள்ளன. தற்போது, திரையரங்க பகுதியும், அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.