/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி மேம்பாலத்தில் தடுப்புகள் அமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி மேம்பாலத்தில் தடுப்புகள் அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி மேம்பாலத்தில் தடுப்புகள் அமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி மேம்பாலத்தில் தடுப்புகள் அமைப்பு
ADDED : ஜூன் 15, 2025 12:18 AM

சென்னை, ஜூன் 15-
எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள மேம்பாலம், இருவழி போக்குவரத்து உடையது. இதில், போக்குவரத்து காவல் துறை சார்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகள், முற்றிலும் சேதமடைந்து அகற்றப்பட்டிருந்தன.
இதனால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை தடுப்பு இல்லாததால் எதிர் திசையில் ஆபத்தான வகையில் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
எனவே, சேதமடைந்த தடுப்புகள் அகற்றப்பட்ட இடங்களில், புதிதாக தடுப்புகள் அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மேம்பாலத்தில் புதிதாக பிளாஸ்டிக் தடுப்புகளை போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர்.