/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' எஸ்.எஸ்.சி.ஏ. அணி அபாரம்
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' எஸ்.எஸ்.சி.ஏ. அணி அபாரம்
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' எஸ்.எஸ்.சி.ஏ. அணி அபாரம்
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' எஸ்.எஸ்.சி.ஏ. அணி அபாரம்
ADDED : ஜன 23, 2024 10:37 PM

சென்னை:டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், எஸ்.எஸ்.சி.ஏ., அணி, 128 ரன்கள் வித்தியாசத்தில், எப்.எஸ்.சி.ஏ., அணியை தோற்கடித்தது.
திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
இதில் நான்காவது டிவிஷன் போட்டியில், எஸ்.எஸ்.சி.ஏ., மற்றும் எப்.எஸ்.சி.ஏ., அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த எஸ்.எஸ்.சி.ஏ., அணி, 30 ஓவர்களில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 200 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் மனோஜ், 48 ரன்கள் அடித்தார்.
எதிர் அணியின் பெண் வீராங்கனை பொப்பனா ஹாசினி ஐந்து விக்கெட்டுகளை எடுத்து, 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்து பேட் செய்த எப்.எஸ்.சி.ஏ., அணி, 24.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 72 ரன்களில் ஆட்டமிழந்தது.
எதிர் அணியின் வீரர் அதித்யா, ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, 20 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

