/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பண்டிகையையொட்டி கூட்ட நெரிசல் கைவரிசை காட்டும் ஆசாமிகளை பிடிக்க தீவிரம்

ADDED : ஜன 14, 2024 02:32 AM
மெரினா, - பண்டிகையொட்டி கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டும் ஆசாமிகளை உடனடியாக கைது செய்வதற்கு, மெரினாவில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி இன்று முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. ஏற்கனவே விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை பகுதியில், மணலில் செல்லும் ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக , மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் என போலீசார் கணித்துள்ளனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்களிடம் நூதன முறையில் கைவரிசை காட்டும் மர்ம மபர்களை உடனடியாக கைது செய்வதற்கு,
கடற்கரை மணலில் செல்லும் ரோந்து வாகனத்தில் போலீசார் தீவிர கண்காணிபில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனாலும், உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்