/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு
/
கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு
ADDED : ஜன 14, 2024 02:20 AM

கோயம்பேடு, கோயம்படு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பனி பொழிவு மற்றும் மழை காரணமாக பூக்கள் விலை மற்றும் விற்பனை குறைந்து, பூக்கள் விலை சரிந்தது.
மேலும், விற்பனையின்றி தேங்கிய சாமந்தி, ரோஸ் உள்ளிட்ட பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. இந்நிலையில், நாளை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.
மேலும், மல்லி பூ வரத்து குறைந்த நிலையில் நிலைக்கோட்டையில் இருந்து ‛ஐஸ்' பெட்டியில் மல்லி பூ கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களில் 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லி பூ, நேற்று 1200 - 1600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்னையான சம்பங்கி பூ, தற்போது 75 - 100 ரூபாய்க்கு விற்பனையானது.
இதபோதல், முல்லை 900 - 1000; ஜாதி - 750 - 900; கனகாம்பரம் - 400 - 700; சாமந்தி - 40 - 100; பன்னீர் ரோஜா - 120; சாக்லேட் ரோஜா - 140; அரளி - 150 ரூபாய்க்கு விற்பனையானது.

