/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்சூரன்ஸ் பணம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி
/
இன்சூரன்ஸ் பணம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி
ADDED : ஜன 19, 2024 12:30 AM
ராமாபுரம், சென்னை, ராமாபுரம் பாரதி சாலையைச் சேர்ந்தவர் புதியராஜா, 23; ஐ.டி., ஊழியர்.
இவரது தந்தை உயிரிழந்த நிலையில், கடந்த டிச., 27ம் தேதி மர்ம நபர் ஒருவர், இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, 'ஓராண்டிற்கு முன் எங்கள் நிறுவனத்தில், உங்கள் தந்தை மூன்று ஆண்டு இன்சூரன்ஸ் கட்டினார்.
இந்த ஆண்டிற்கான இன்சூரன்ஸ் தொகை, 20,750 ரூபாயை செலுத்தவில்லை. அதை செலுத்தினால் உங்களுக்கு 93,000 ரூபாய் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய புதியராஜா, அந்த பணத்தை 'ஆன்லைன்' வாயிலாக அனுப்பியுள்ளார். ஆனால், அவர் கூறியபடி பணம் வரவில்லை.
விசாரித்த போது, அந்த நிறுவனத்தில் இவரது தந்தை இன்சூரன்ஸ் சேரவில்லை என தெரிந்தது.
இதையடுத்து, கடந்த 17ம் தேதி, ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

