/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவேரி மருத்துவமனையில் இலவச முதுகுதண்டு சிகிச்சை
/
காவேரி மருத்துவமனையில் இலவச முதுகுதண்டு சிகிச்சை
ADDED : ஜூன் 26, 2025 12:09 AM
சென்னை, முதுகுத் தண்டுவட வளைவு, அது சார்ந்த பாதிப்புள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிப்பதற்காக, 'ஜீவன்' என்ற புதிய செயல்திட்டத்தை, காவேரி மருத்துவமனை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கருவில் உள்ள குழந்தைக்கு போலிக் அமில குறைபாடு மற்றும் வேறு சில காரணங்களால் நரம்பு குழாய் பாதிப்புகள் ஏற்படும். அதாவது, 1,000 பிரவசங்களில், 10 முதல் 15 குழந்தைகள் பாதிப்புடன் பிறக்கின்றன.
நரம்பு குழாய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை, முதுகெலும்பு, தண்டுவடங்களில் பிரச்னை ஏற்படும். முதுகுத் தண்டுவட வளைவு, தண்டுவட பிளவு, கட்டிகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், அந்த பாதிப்புகள் குழந்தையின் வளர்ச்சியையும், இயக்கத்தையும் முடக்கிவிடும்.
மேலும், உள் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. இத்தகைய பிரச்னை உள்ள ஏழை குழந்தைகளால், லட்சக்கணக்கில் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது.
எனவே, ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மித்ரா அமைப்பு வாயிலாக திரட்டப்பட்ட, 85 லட்சம் ரூபாய் நிதி உதவியை வைத்து, முதற்கட்டமாக, 35 குழந்தைகளுக்கு இலவசமாக முதுகு தண்டுவட பாதிப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.