/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மிரட்டி பணம் பறித்த ரவுடி கும்பல் கைது
/
மிரட்டி பணம் பறித்த ரவுடி கும்பல் கைது
ADDED : ஜன 19, 2024 12:20 AM
எண்ணுார், எண்ணுார், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார், 23. நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு, எர்ணாவூரைச் சேர்ந்த பாம்பு நாகராஜ், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த யுவராஜ் உட்பட ஐந்து பேர் கும்பல், சதீஷ்குமாரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
சதீஷ்குமாரின் சட்டை பையில் 650 ரூபாயை எடுத்த போது, அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது, அவர்களையும் பாம்பு நாகராஜ் உள்ளிட்டோர் கத்தியை காட்டி மிரட்டி, தப்பியோடினர்.
இது குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவுடி கும்பலை சேர்ந்த பிரபுதேவா, 23, அமர்தீப் பாண்டியன், 20, மருது அய்யப்பன், 22 உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

